விழிப்புணர்வுக்காக பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் : பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைப்பு

சேலத்தில் விழிப்புணர்வுக்காக பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், திருவள்ளூருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.
விழிப்புணர்வுக்காக பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் : பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைப்பு
x
சேலத்தில் விழிப்புணர்வுக்காக பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், திருவள்ளூருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளதாக கூறினார். வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், 24 மணி நேரமும் வேட்பாளர்களின் முகவர்கள் அங்கேயே தங்கியிருந்து கண்காணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் வாக்கு எண்ணிக்கை பணிக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் ஆட்சியர் ரோகிணி கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்