சிவகார்த்திகேயன் ஓட்டு விவகாரம் : "மறுவாக்குப்பதிவு அவசியமில்லை"- சத்ய பிரத சாஹு

நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு அவசியமில்லை என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் ஓட்டு விவகாரம் : மறுவாக்குப்பதிவு அவசியமில்லை- சத்ய பிரத சாஹு
x
மதுரவாயல் குட்செப்பர்டு பள்ளியில் அமைக்கப்பட்ட 303 எண் கொண்ட சென்னையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்தார். வாக்காளர்கள் பட்டியலில் பெயரில்லாமல், அவர் ஓட்டு போட்ட விவகாரம் சர்ச்சையானது. இது குறித்து விளக்கம் அளித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹு, வாக்காளர்கள் பட்டியலில் பெயர் இல்லாத போதும், சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த, அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். விதியை மீறி சிவகார்த்திகேயன் வாக்களித்திருந்தாலும், அவரது வாக்கும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறினார். நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்தாரா இல்லையா என்பது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹு தெரிவித்தார்.  இடைத்தேர்தல் நடைபெறவுள்ள  4 சட்டமன்ற தொகுதிகளில் 6 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஒட்டபிடாரம் தொகுதியில் மட்டும் 6 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்தார். 


Next Story

மேலும் செய்திகள்