போலீஸார் துன்புறுத்துவதாகக் கூறி கைதிகள் போராட்டம் - போர்க்களமாக மாறிய மதுரை சிறைச்சாலை பகுதி

மதுரை மத்திய சிறையில், போலீசார் துன்புறுத்துவதாக கூறி, கைதிகள் மதில்சுவர் மீது ஏறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
x
மதுரை மத்திய சிறையில், போலீசார் துன்புறுத்துவதாக கூறி, கைதிகள் மதில்சுவர் மீது ஏறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
ஏற்பட்டது. மதுரை மத்திய சிறையில்  சோதனை என்ற பெயரில் போலீஸார் துன்புறுத்துவதாகவும், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் ஊழலில் ஈடுபடுவதாகவும் கூறி,
50-க்கும் மேற்பட்ட கைதிகள் சிறை கட்டிடத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறைத் துறைக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பிய அவர்கள், உடல் முழுவதும் பிளேடால் அறுத்துக்கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். சிறைக்கு வெளியே கற்களை வீசியதால் புதுஜெயில் ரோடு முழுவதிலும் கற்குவியலாக காட்சியளித்தது. இதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, காவல் இணைஆணையர் சசிமோகன் தலைமையில் போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். இதற்கிடையே, மேற்கு வட்டாச்சியர் கோபிதாஸ் சிறைக்கு வந்து, சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி, கண்காணிப்பாளர் ஊர்மிளா ஆகியோருடன் இணைந்து, கைதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக முடிவு எட்டப்பட்டதை அடுத்து, கைதிகள்
போராட்டத்தைக் கைவிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்