வாக்கு எண்ணும் மையத்திற்குள் வட்டாட்சியர் நுழைந்த விவகாரம் : இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை - சத்யபிரதா சாஹூ தகவல்

மதுரையில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் வட்டாட்சியர் நுழைந்த விவகாரம் தொடர்பான இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விரிவான அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணும் மையத்திற்குள் வட்டாட்சியர் நுழைந்த விவகாரம் : இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை - சத்யபிரதா சாஹூ தகவல்
x
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மதுரைக்கு சென்று ஆய்வு நடத்திய கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி விரிவான அறிக்கையை சமர்ப்பித்திருப்பதாகவும் அந்த அறிக்கை  இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்தார். மதுரை மாவட்ட ஆட்சியர் மாற்றம் குறித்த முடிவை இந்திய தேர்தல் ஆணையமே எடுக்கும் என்றும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்