பாரம்பரிய தற்காப்பு கலை, நாட்டிய கலைகளை பாதுகாக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு

தூத்துக்குடியை சேர்ந்த செல்வகுமார் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
பாரம்பரிய தற்காப்பு கலை, நாட்டிய கலைகளை பாதுகாக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு
x
நமது பாரம்பரிய தற்காப்புக் கலைகளான சிலம்பம், களரி, வர்மக்கலை, வளரிக்கலை போன்றவையும், நாட்டிய கலைகளான பரதம், கரகம், கும்மி, ஒயிலாட்டம், பறையாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம்,  காவடியாட்டம் உள்ளிட்டவையும் பெரும்பாலும் அழிந்துவிட்டன என்றும், இவை முழுவதும் அழிந்து விடாமல் பாதுகாக்க அவற்றை இளம் தலைமுறையினருக்கு கற்பிப்பது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அவற்றை பள்ளிக்கல்வியில் பாடமாக சேர்க்க உத்தரவிட வேண்டும்" எனவும் அவர் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வு, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்