திருப்பரங்குன்றத்தில் பேருந்து நிலைய வசதி இல்லாமல் தவிக்கும் மக்கள்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் பேருந்து நிலையம் இல்லாம‌ல் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
x
திருப்பரங்குன்றத்திற்கு, பல பகுதிகளில் இருந்தும் பேருந்துகள் வருவதால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. மேம்பாலத்தின் இரு பகுதிகளிலும் இணைப்பு சாலைகள் அமைக்கப்படாத‌தால் விபத்துகளும் வழிப்பறி சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பள்ளி குழந்தைகள் முதல் முதியோர் வரை போக்குவரத்து வசதியின்றி தவித்து வருவதை கருத்தில் கொண்டு பேருந்து நிலையம் ஏற்படுத்தி தரவேண்டும் என்பதே, திருப்பரங்குன்றம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்