ஒகேனக்கலில் குவியும் சுற்றுலா பயணிகள்

கோடை விடுமுறையை முன்னிட்டு ஒகேனக்கலுக்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஒகேனக்கலில் குவியும் சுற்றுலா பயணிகள்
x
மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், பரிசல் பயணம், முதலை பண்ணை என சுற்றுலா பயணிளுக்கு இயற்கையான சுற்றுலா தளமாக காணப்படுகிறது.தமிழகம் மட்டுமில்லாமல் கர்நாடகா, கேரளா, ஆந்திர மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.நீர்வீழ்ச்சியில் நீராடியும்,தொங்கு பாலத்தில் நீர்வீழ்ச்சியின் இயற்கை அழகை ரசிப்பதையும் சுற்றுலா பயணிகள் அதிகமாக விரும்புகின்றனர்.பரிசல் படகில் குடும்பத்துடன் சவாரி செய்தும் புகைப்படங்கள் எடுத்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்