நிர்மலாதேவி வழக்கு - சிபிஐ விசாரனை கோரி மனு
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவாகரத்தில் சிபிஐ விசாரிக்க கோரிய வழக்கில் நிர்மலா தேவி ஆஜராகி நீதிபதிகளிடம் விளக்கமளித்தார்
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவாகரத்தில் சிபிஐ விசாரிக்க கோரிய வழக்கில் நிர்மலா தேவி ஆஜராகி நீதிபதிகளிடம் விளக்கமளித்தார்.அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலர் சுகந்தி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், நிர்மலா தேவியின் வழக்கில் உண்மையை வெளிகொண்டு வர சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.இந்த மனுவை கடந்த வாரம் விசாரித்த நீதிபதிகள்
கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு, நிர்மலா தேவியை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தனர். அதனை தொடர்ந்து இன்று நேரில் ஆஜரான நிர்மலா தேவியிடம், நீதிபதிகள் தனி அறையில் விசாரணை நடத்தினர்.ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையின் போது வேறு யாரும் அனுமதிக்க பட வில்லை.
Next Story