லோக் ஆயுக்தா தலைவர் நியமனத்திற்கு தடை கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமித்த அரசாணைக்கு தடை கோரிய மனு குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லோக் ஆயுக்தா தலைவர் நியமனத்திற்கு தடை கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
x
லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வுக்கு முன்  உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசிக்க சட்டத்தில் வகை செய்யப்படவில்லை எனக் கூறி சென்னையைச் சேர்ந்த யோகானந்தன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் லோக் ஆதுக்தா அமைத்து சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இதில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக தலைமை நீதிபதியை கலந்தாலோசிப்பது என்பது அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது எனவும் அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து மனு குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 29 ந் தேதிக்கு தள்ளி வைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்