பெண் காவல் ஆய்வாளர் தற்கொலை

குடும்ப தகராறால் விரக்தி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
பெண் காவல் ஆய்வாளர் தற்கொலை
x
நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில்  காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த  ஜெய்ஹிந்த் தேவி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். திண்டிவனம் அடுத்த காவேரிப்பாக்கம் பகுதியில் கணவர் மாணிக்கவேல், 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறால் விரக்தி அடைந்த ஜெய்ஹிந்த் தேவி நள்ளிரவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். தகவலறிந்த திண்டிவனம் டிஎஸ்பி கனகேஸ்வரி சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு, பிரேதத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து திண்டி வனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்