தனியாக நின்ற வேனில் 300 கிலோ குட்கா பறிமுதல்

சென்னை திருவொற்றியூரில் மாட்டு மந்தை மேம்பாலம் அருகே தனியாக நின்றிருந்த வேனில் போலீஸார் சோதனை நடத்தினர்.
தனியாக நின்ற வேனில் 300 கிலோ குட்கா பறிமுதல்
x
சென்னை திருவொற்றியூரில் மாட்டு மந்தை மேம்பாலம் அருகே தனியாக நின்றிருந்த வேனில் போலீஸார் சோதனை நடத்தினர். அதில், மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட குட்கா  புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, வேனை மீட்டு, திருவொற்றியூர் காவல் நிலையத்துக்கு போலீஸார் கொண்டு சென்றனர். வேனில் இருந்த 8 மூட்டைகளில் 300 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இவை எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்