பெண்களை இழிவாக பேசி வாட்ஸ் ஆப் வீடியோ - கைது செய்ய வலியுறுத்தி 12 இடங்களில் மறியல்

பெண்களை இழிவாக பேசியவர்களை கைது செய்ய வலியுறுத்தி 12 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது
பெண்களை இழிவாக பேசி வாட்ஸ் ஆப் வீடியோ - கைது செய்ய வலியுறுத்தி 12 இடங்களில் மறியல்
x
ஒரு சமூகத்தைச் சேர்ந்த பெண்களை மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இழிவாக பேசியது வாட்ஸ் அப்பில் வெளிவந்துள்ளது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஒரு சமூகத்தினர் துவரங்குறிச்சி, லிங்கம்பட்டி, ஆத்துப்பட்டி, கலிங்கபட்டி, பாலக்குறிச்சி, வளநாடு உள்ளிட்ட 12 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் வெட்டுக்காடு என்ற பகுதியில் ஆவேசமடைந்த மக்கள் சாணியை கரைத்து கையில் துடைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்