சிவந்தி ஆதித்தனார் 6 ஆம் ஆண்டு நினைவு தினம்...

தினத்தந்தி அதிபர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, அவரது உருவப் படத்துக்கு மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
x
சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி  நடைபெற்றது. அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த சிவந்தி ஆதித்தனார் உருவப் படத்திற்கு, தினத்தந்தி குழும நிர்வாக இயக்குநர் சி. பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலைமலர் இயக்குநர் சிவந்தி ஆதித்தன், தந்தி டிவி இயக்குநர் ஆதவன் ஆதித்தன் மற்றும் அவரது குடும்பத்தினரும் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தினத்தந்தி, மாலைமலர், தந்தி தொலைக்காட்சி ஊழியர்கள் மரியாதை செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்