மிஸ் கூவாகம் 2019 அழகிப்போட்டி : முதல் சுற்றில் 15 திருநங்கைகள் தேர்வு

சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற, மிஸ் கூவாகம் அழகிப் போட்டிக்கான முதல் சுற்றில் 15 திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மிஸ் கூவாகம் 2019 அழகிப்போட்டி : முதல் சுற்றில் 15 திருநங்கைகள் தேர்வு
x
விழுப்புரம் மாவட்டம், கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில், சித்திரை திருவிழா கடந்த 2 ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக கருதப்படும், மிஸ் கூவாகம் அழகிபோட்டி இன்று காலை தொடங்கியது. முதல் சுற்றில் 35 திருநங்கைகள் பங்கேற்ற நிலையில், அவர்களது, நடை , உடை, பாவனை ஆகியவற்றை கணக்கிட்டு, 2 சுற்றுக்கு 15 திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இரவு வரை நடைபெறும் அழகிப்போட்டியில், மிஸ். கூவாகம் அழகியாக ஒரு திருநங்கை தேர்வு செய்யப்படுவார்.

Next Story

மேலும் செய்திகள்