வெற்றிலை பிரித்து கொடுக்கும் விநோத திருவிழா - ஏராளமான கிராமத்தினர் பங்கேற்பு

மதுரை மேலூரில் தமிழ்புத்தாண்டில் விவசாயம் செழிக்க வெற்றிலையை பிரித்து கொடுத்து வழிபடும் விநோத திருவிழா நடைபெற்றது.
வெற்றிலை பிரித்து கொடுக்கும் விநோத திருவிழா - ஏராளமான கிராமத்தினர் பங்கேற்பு
x
நூற்றாண்டு காலமாக கொண்டாடப்பட்டு வரும் இந்த திருவிழாவை முன்னிட்டு, பல கிராமத்தினர், வெள்ளலூர் மந்தையில் ஒன்று கூடினர். அப்போது, மொத்தமாக கொண்டு வரப்பட்ட வெற்றிலைகளை ஊர் அம்பலகாரர்கள் முன்னிலையில் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. அவற்றை பெற்றுகொண்ட கிராமத்தினர் தங்களது வீடுகளில் வைத்து வணங்கிவிட்டு பின்னர் மாட்டு சாணம் மற்றும் குப்பைகளை வயல்வெளியில் தெளித்து   வழிபட்டனர். இவ்வாறு செய்வதால் விவசாயம் செழிக்கும் என்பது இவர்களின் நம்பிக்கை என்பது குறிப்பிடத்தக்கது

Next Story

மேலும் செய்திகள்