ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்

கள்ளக்குறிச்சி அருகே அரசு பேருந்தில் வந்த, 5 லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்
x
கள்ளக்குறிச்சி அருகே அரசு பேருந்தில் வந்த, 5 லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கள்ளக்குறிச்சி, ரோடு மாமாந்தூர் பேருந்து நிறுத்தம் அருகே,  தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரிலிருந்து கள்ளக்குறிச்சி வந்த அரசு பேருந்தில் 36 சாக்கு மூட்டைகளில், 5 லட்ச ரூபாய் மதிப்பிலான ஹான்ஸ் என்கிற குட்கா புகையிலை இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், கள்ளக் குறிச்சி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து , அவற்றை கொண்டு வந்தது யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்