தினகரனிடம் வேட்பாளரை மாற்ற சொன்னதா பா.ஜ.க.? - பொன்.ராதாகிருஷ்ணன் பதில்

கன்னியாகுமரியில் தமக்கு எதிராக பலம் இல்லாத வேட்பாளரை நிறுத்தும்படி தினகரனிடம் பா.ஜ.க.வை சேர்ந்த கருப்பு முருகானந்தம் தமாஷூக்கு பேசியிருக்கலாம் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
x
கன்னியாகுமரியில் தமக்கு எதிராக பலம் இல்லாத வேட்பாளரை நிறுத்தும்படி தினகரனிடம் பா.ஜ.க.வை சேர்ந்த கருப்பு முருகானந்தம் தமாஷூக்கு பேசியிருக்கலாம் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தினகரனும், பா.ஜ.க. பிரமுகர் கருப்பு முருகானந்தமும் நல்ல நண்பர்கள் என்றார். இந்த விவகாரத்தால் தேர்தலில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று குறிப்பிட்ட பொன். ராதாகிருஷ்ணன், தம்மை கேட்டிருந்தால் பலமான வேட்பாளரையே தேர்வு செய்ய சொல்லியிருப்பேன் என்றார். தனிப்பட்ட விவகாரங்களை வெளியே சொல்வது நாகரிகமல்ல என்றும் தினகரனுக்கு பொன். ராதாகிருஷ்ணன் அறிவுரை வழங்கினார். 

Next Story

மேலும் செய்திகள்