தினத்தந்தி-விஐடி இணைந்து நடத்தும் வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி - மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

தினத்தந்தி மற்றும் விஐடி இணைந்து ஏற்பாடு செய்த வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி, வேலூர் விஐடி பல்கலைக்கழக அண்ணா அரங்கத்தில் நடைபெற்று வருகிறது.
x
தினத்தந்தி மற்றும் விஐடி பல்கலைக் கழகம் இணைந்து ஏற்பாடு செய்த வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி, வேலூர் விஐடி பல்கலைக்கழக அண்ணா அரங்கத்தில்  நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 10ஆம் வகுப்பு , 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளின் மேற்படிப்புக்கு வழிகாட்டும் வகையில் கல்வியாளர்கள் உரையாற்றினர். விஐடி பல்கலைக் கழகத்தின் இணை துணை வேந்தர் நாராயணன் தொடக்கி வைத்த இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்