4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு
பதிவு : ஏப்ரல் 09, 2019, 05:52 PM
மாற்றம் : ஏப்ரல் 09, 2019, 05:58 PM
தமிழகத்தில் காலியாகவுள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் மே 19 தேதியன்று தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 21 சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக இருந்த நிலையில், 18 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தலுடன் சேர்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்டது. 
இந்நிலையில், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் காலமானதை அடுத்து காலியாக உள்ள பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை 22ஆக
உயர்ந்தது. இதையடுத்து 4 தொகுதிகளுக்கும் சேர்த்து நாடாளுமன்ற தேர்தலுடனேயே வாக்குப்பதிவை நடத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. அண்மையில் சென்னை வந்த தேர்தல் ஆணையர்கள், விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என கூறிய நிலையில், 4 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, நாடாளுமன்ற தேர்தலின் 7வதுகட்ட வாக்குப்பதிவு நாளான மே 19-ம் தேதியன்று சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கு வாக்கு பதிவு நடைபெறும் வேட்பு மனு தாக்கல் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் ஏப்ரல் 29ம் தேதியாகும். ஏப்ரல் 30-ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் என்றும் மே 2-ம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 4 தொகுதிகளிலும் மே 19-ம் தேதியன்று பதிவாகும் வாக்குகள், மே 23-ம் தேதி எண்ணப்பட்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுடன் வெளியாகும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு - டி.கே.எஸ் இளங்கோவன் கருத்து 

4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு - டாக்டர் சரவணன் கருத்து

4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு - சுமன் சி ராமன் கருத்து

4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு - ரவீந்திரன் துரைசாமி கருத்து

4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு திமுக வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து திமுக எம்பி இளங்கோவன் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட திமுக வேட்பாளர் சரவணன் ஆகியோர் தொலைபேசி வாயிலாக தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்...

4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு திமுக வரவேற்பு - சரவணன் கருத்து

4  சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் - அமைச்சர் ஜெயக்குமார் கருத்து

4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு - டாக்டர் சரவணன் கருத்து

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

534 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4044 views

பிற செய்திகள்

பெண் காவல் ஆய்வாளர் தற்கொலை

குடும்ப தகராறால் விரக்தி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

4 views

மீன் இனப்பெருக்க காலம் - விசைப்படகுகளுக்கு தடை

கூடுதல் விலைக்கு விற்பனை, நாட்டுப்படகு மீனவர்கள் மகிழ்ச்சி

9 views

2019-20 பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் - ஜூலை முதல் வாரத்தில் பொது கலந்தாய்வு

மே இரண்டாம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

18 views

அனுமதியின்றி சாலை மறியல் போராட்டம் - வி.சி.க.வினர் மீது வழக்கு பதிவு

சீர்காழி அருகே அனுமதியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

11 views

பெண்கள் ​மீதான சர்ச்சை பேச்சுக்கு கண்டனம்

ஆட்சியர் சமாதானப் பேச்சு - 3 மணி நேர போராட்டம் வாபஸ்

11 views

வேட்பாளர்களை அறிவிக்காத பாஜக காங்கிரஸ் - இழுபறி நீடிப்பதால் காங்கிரஸ் ஆம் ஆத்மி கூட்டணி சந்தேகம்

டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளுக்கு மே மாதம்12 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.