"8-ஆம் வகுப்பு வரை மாணவர்களை தோல்வி அடைய செய்ய கூடாது" - தமிழக அரசு

8ம் வகுப்பு வரை மாணவர்களை தோல்வி அடையச் செய்யக் கூடாது என்று அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
x
இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களை தோல்வி அடையக்  செய்யக்கூடாது என்ற உத்தரவு ஏற்கனவே அமலில் இருக்கிறது. எனினும்,  இரண்டு மாதங்களுக்கு முன்பாக இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த மத்திய அரசு,  5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த சட்டத் திருத்தத்தை தமிழக அரசு ஏற்கிறதா இல்லையா என அறிவிக்காத நிலையில், முக்கிய அறிவிப்பு ஒன்றை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில் அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 8ஆம் வகுப்பு வரை  அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. அதனை மீறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசு கொண்டு வந்துள்ள இலவச மற்றும் கட்டாய கல்வி சட்ட திருத்தத்தை ஏற்பதற்கு தமிழக அரசு மறுத்திருக்கிறது.
மேலும் ஒன்பதாம் வகுப்பில் தோல்வி அடையக் கூடிய மாணவர்கள் உடனடி தேர்வை எழுதி தேர்ச்சி பெறலாம் என்ற திட்டமும் அறிமுகமாகி உள்ளது. அதன்படி ஒன்பதாம் வகுப்பில் தோல்வி அடையக் கூடிய மாணவர்களுக்கு ஜூன் 3 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை உடனடித் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்