சிறந்த கல்வி நிறுனங்களுக்கான தரவரிசைப் பட்டியல் - சென்னை ஐஐடி-க்கு முதலிடம்

இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. முதலிடத்தையும், அண்ணாப் பல்கலைக் கழகம் 14 வது இடத்தையும் பிடித்துள்ளது.
சிறந்த கல்வி நிறுனங்களுக்கான தரவரிசைப் பட்டியல் - சென்னை ஐஐடி-க்கு முதலிடம்
x
இந்தியாவில் உள்ள பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களின் கல்வித் தரத்தை ஆய்வு செய்து, மத்திய  மனித வள மேம்பாட்டுத் துறை சார்பில் ஆண்டுதோறும் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.2019ஆம் ஆண்டிற்கான தேசிய தரவரிசைப் பட்டியலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ளார்.சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து பெங்களுர் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ் நிறுவனம் 2ஆம் இடத்தையும், டெல்லி ஐஐடி 3ஆம் இடத்தையும் பிடித்துள்ளது.சென்னை அண்ணா பல்கலைக் கழகம் 14 வது இடத்தையும்,கோவை பாரதியார் பல்கலைக் கழகம் 21வது இடத்தையும்,வேலூர் வி.ஐ.டி. பல்கலைக் கழகம் 32 வது இடத்தையும்,சென்னை பல்கலைக் கழகம் 33 வது இடத்தையும் பெற்றுள்ளது.இதனிடையே,சிறந்த பல்கலைக் கழகங்களுக்கான பட்டியலில் அண்ணாப் பல்கலைக் கழகம் 6 வது இடத்தையும்,கோவை பாரதியார் பல்கலைக் கழகம் 14 வது இடத்தையும்,சென்னை பல்கலைக் கழகம் 20 வது இடத்தையும்,தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் 44 வது இடத்தையும் பெற்றுள்ளது.சிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்களின் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. முதலிடத்தையும் அண்ணாப் பல்கலைக் கழகம் 9 வது இடத்தையும்,வேலூர் வி.ஐ.டி.பல்கலைக் கழகம் 18வது இடத்தையும் பிடித்துள்ளது.சிறந்த கல்லூரிகளுக்கான பட்டியலில் சென்னை மாநிலக் கல்லூரி 3 வது இடத்தையும் பிடித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்