"தனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டாம்" - முதலமைச்சர், ஸ்டாலினுக்கு நீதிமன்றம் அறிவுரை
பதிவு : ஏப்ரல் 09, 2019, 09:04 AM
தனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டாம் என முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலினை, சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கொடநாடு கொலை , கொள்ளை விவகாரங்களில் தம்மை தொடர்புபடுத்தி ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருவதாக அவர் மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை ரத்து செய்ய கோரி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது. இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தில் தொடர்ந்து ஸ்டாலின்  அவதூறாக பேசி வருவதாகவும் இதனால் அவர் மீதான வழக்கு  விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி முதலமைச்சர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி இளந்திரையன் முதல்வரும், ஸ்டாலினும் தனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தி விசாரணையை  புதன்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.