சிறுமி ஹாசினி கொலை வழக்கு : தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.
x
தமிழகத்தை உலுக்கிய சிறுமி ஹாசினி கொலை வழக்கை விசாரித்த, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் கடந்த 2018 பிப்ரவரி மாதம் தஷ்வந்த்தை குற்றவாளி என்று 46 ஆண்டுகள் சிறை தண்டனை, தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து தஷ்வந்த் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தஷ்வந்த்துக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டார். உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தஷ்வந்த் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தஷ்வந்த்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்