"அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் மோடி ஆட்சி தொடரும்" - அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக அன்புமணி பிரசாரம்

சேலம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக கொண்டலாம்பட்டி பகுதியில் அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரித்தார்.
அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் மோடி ஆட்சி தொடரும் - அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக அன்புமணி பிரசாரம்
x
சேலம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக கொண்டலாம்பட்டி பகுதியில் அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றால் மத்தியில் மோடி ஆட்சி தொடரும் என்றார். சாதாரண விவசாயி என்ற நிலையில் இருந்து முதல்வராக உயர்ந்த எடப்பாடி பழனிசாமி மக்களுக்கான நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருவதாக அன்புமணி குறிப்பிட்டார். காவிரி - கோதாவரி இணைப்பு திட்டதை நிறைவேற்றினால் மேட்டூர் அணையில் எப்போதும் தண்ணீர் இருக்கும் என்றும், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சமே இல்லாத நிலை வரும் என்றும் அன்புமணி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்