விளை நிலத்தில் உடைந்த எண்ணெய் குழாய் : ஒரு ஏக்கர் நிலம் இழப்பு - விவசாயி வேதனை

திருவாரூர் மாவட்டம் எருகாட்டூரில் பருத்தி நிலத்தில் எண்ணெய் குழாய் உடைந்து, ஒரு ஏக்கர் நிலம் சேதமடைந்து விட்டதாக பாதிக்கப்பட்ட விவசாயி வேதனை தெரிவித்துள்ளார்.
விளை நிலத்தில் உடைந்த எண்ணெய் குழாய் : ஒரு ஏக்கர் நிலம் இழப்பு - விவசாயி வேதனை
x
திருவாரூர் மாவட்டம் எருகாட்டூரில் பருத்தி நிலத்தில் எண்ணெய் குழாய் உடைந்து, ஒரு ஏக்கர் நிலம் சேதமடைந்து விட்டதாக பாதிக்கப்பட்ட விவசாயி வேதனை தெரிவித்துள்ளார். கச்சா எண்ணெய் பரவிய ஒரு ஏக்கர் நிலம் விளைச்சலுக்கு உகந்தது அல்ல என்று வேதனை தெரிவித்த விவசாயி செல்வராஜ், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், ஓஎன்ஜிசி நிறுவன குழாய்களை குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்