பறக்கும் படை சோதனை-காய்கறி வியாபாரிகள் பாதிப்பு

திருப்பூரில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் பறக்கும் படையினர் தொடர் சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
பறக்கும் படை சோதனை-காய்கறி வியாபாரிகள் பாதிப்பு
x
திருப்பூரில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் பறக்கும் படையினர் தொடர் சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.  இந்நிலையில் திருப்பூர் தினசரி காய்கறி சந்தைக்கு வரும் வியாபாரிகள் சாதாரணமாக 3 லட்சம் ரூபாய் வரை கொண்டு செல்கின்றனர்.  விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யும் அவர்கள், உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாததால் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் சிறு நிறுவன உரிமையாளர்கள் தங்கள், தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக கூட பணத்தை எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்