இரண்டு உயிர்களை பலி வாங்கிய தகாத உறவு : கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட பெண்

வேலைபார்த்த கடையிலேயே வைத்து பெண்ணை கொலை செய்த குற்றவாளி, அங்கேயே தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு உயிர்களை பலி வாங்கிய தகாத உறவு : கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட பெண்
x
சேலம் ஜங்சன் ரயில்நிலையம் செல்லும் பிரதான சாலையில் பாண்டியராஜன் என்பவருக்கு சொந்தமான  ஐஸ்கிரீம் கடை உள்ளது. அங்கு ஷரீன் சித்தாரா பானு என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் ஷரீன் சித்தாரா பானு வேலைக்கு வந்தவுடன், பாண்டியராஜன் சொந்தவேலை காரணமாக வெளியே சென்றுள்ளார். பாண்டியராஜன் திரும்ப வந்து பார்த்தபோது கடையின் ஷட்டர் உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்துள்ளது. ஷட்டரை திறக்க முடியாததால், பாண்டியராஜன் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஷட்டரை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். இங்கு ஷரீன் சித்தாரா பானு  கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். மேலும் கடையின் உள்ளேயே, இனாமுல்லா  என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்துள்ளது. பின்னர் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கிடைத்த 16 பக்க கடிதத்தில் தற்கொலைக்கும் கொலைக்கும் தானே காரணம் என்று இனாமுல்லா எழுதி வைத்துள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். திருமணமாகி கணவனை பிரிந்து வாழ்ந்த ஷரீன் சித்தாரா பானுவுக்கும், அதேபகுதியை சேர்ந்த  இனாமுல்லாக்கும் தகாத உறவு இருந்துள்ளதும் அதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததும்  முதல் கட்ட விசாரணையில்  தெரியவந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்