ரூ.1.76 லட்சம் கோடி சொத்து - அதிரடித்த சுயேட்சை வேட்பாளர்

1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து, ரூ.4 லட்சம் கோடி கடன் என வேட்பு மனுவில் ஏகத்துக்கும் ரீல் விட்ட சுயேட்சை வேட்பாளர் ஒருவரின் மனுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு, அவருக்கு சின்னமும் ஒதுக்கிய பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது.
x
நெல்லையை சேர்ந்தவர் ஜெபமணி. இந்திய ஜனதா தள கட்சியின் தமிழக தலைவராக இருந்த இவரது மகனும் ஓய்வு பெற்ற காவல் துறை ஆய்வாளருமான மோகன்ராஜ் என்பவர் சென்னை பெரம்பூரில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், தனக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் சொத்தும், ரூ.4 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அந்த மனுவை எந்த வித விசாரணையும் இன்றி தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதோடு, பச்சை மிளகாய் சின்னம் ஒதுக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மோகன்ராஜ் கூறுகையில், அஃபிடவிட்டில் என்ன வேண்டுமானாலும் பதிவு செய்யலாம் என்றால் அந்த படிவத்தை எதற்காக தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ய சொல்கிறது என்று கேள்வி எழுப்பினார். ஏற்கனவே 2009-ல் தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி மற்றும் 2016ல் கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கான தேர்தலில் இதேப்போல சொத்து உள்ளதாக அபிடவிட் தாக்கல் செய்ததாக கூறிய அவர், தேர்தல் ஆணையம் இப்படி செயல்படுவதை உணர்த்தவே இவ்வாறு குறிப்பிட்டதாக தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தில் மறுசீரமைப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அப்போது வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்