நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவர் நேரில் ஆஜர்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைவர் திரிபாதி உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவர் நேரில் ஆஜர்
x
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வு ஒன்றில், கேள்வி ஒன்றுக்கு மதிப்பெண் வழங்க கோரி  அருணாச்சலம் என்பவர் தொடர்ந்த வழக்கு, ஐஐடிபேராசிரியர் மூர்த்தி அளித்த அறிக்கையின் அடிப்படையில் தள்ளுபடி செய்யப்பட்டது.இந்நிலையில் மூர்த்தி ஆள்மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, போலி அறிக்கை தாக்கல் செய்ததாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், தேர்வாணைய தலைவர் திரிபாதி நேரில் ஆஜராகினார். தொடர்ந்து சென்னை பல்கலைக்கழக ஆலோசகர் ஜி.வி.குமாரின் பரிந்துரையின் பேரிலேயே மூர்த்தி நியமிக்கப்பட்டார் என அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜி.வி.குமாரின்  வழக்கறிஞர், தனி அறையில் வைத்து குமாரிடம் வெற்று காகிதத்தில்  கையெழுத்து பெற்று கைது செய்ததாக தெரிவித்தார். மேலும், தன் தரப்பு வாதங்களையும் கேட்க கோரிக்கை விடுத்தார். இந்நிலையில்  விசாரணை மீண்டும் பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.  


Next Story

மேலும் செய்திகள்