தொழுகை முடித்து வந்தவர்களிடம் தீவிர ஓட்டு வேட்டை - இஸ்லாமிய மக்களிடம் வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கு.சுபாஷினி பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கு.சுபாஷினி, பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.மயிலாடுதுறை தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ள அவர், நீடுர் ஜாமியா மஸ்ஜித்தில் தொழுகை முடித்து வந்த இஸ்லாமிய மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.தேர்தல் வாக்குறுதியை துண்டு பிரசுரமாக வழங்கி விவசாயி சின்னத்திற்கு வாக்குகள் கேட்டார். அவருடன் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் வாக்கு சேகரித்தனர்.
Next Story