தைவான் உதவியுடன் காலணி தொழிற்சாலை - ஏ.கே.மூர்த்தி வாக்குறுதி

சோளிங்கர் பகுதியில் தைவான் நாட்டின் உதவியுடன் காலணி தொழிற்சாலை அமைக்கப்படும் என்று ஏ.கே. மூர்த்தி கூறினார்
தைவான் உதவியுடன் காலணி தொழிற்சாலை - ஏ.கே.மூர்த்தி வாக்குறுதி
x
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி மற்றும் சோளிங்கர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் வெங்குபட்டு சம்பத் ஆகியோர்  இணைந்து, வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த மேல்வீராணம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய ஏ.கே. மூர்த்தி,  அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக தைவான் நாட்டின் உதவியுடன் காலணி தொழிற்சாலையை அமைக்கப்படும் என்றும், அதன் மூலம் 20 ஆயிரம் பெண்களுக்கு வேலை கிடைக்கும் என்றும் கூறினார்.  


Next Story

மேலும் செய்திகள்