தொண்டரணி மேல் கை வைத்த நபர் - நபரை புரட்டி எடுத்த தொண்டரணி
கும்பகோணத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் தொண்டரணியினர்,ஒரு நபரை அடித்து உதைத்து புரட்டி எடுத்ததால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
வைகோவின் பேச்சை கேட்க முண்டியடித்து கொண்டு அந்த நபர் மேடை நோக்கி முன்னேறியதாக கூறப்படுகிறது. அவரை தடுக்க முயன்ற போது, இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கவனித்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, மைக்கில் தொண்டரணியினரை அழைத்து சமாதானப்படுத்தினார்.
Next Story