ஆண்டிப்பட்டியில் 13 ஆம் தேதி பிரதமர் மோடி பிரசாரம் - பொதுக்கூட்ட கால்கோள் நட்ட ஒ. பன்னீர்செல்வம்

நரேந்திரமோடி பங்கேற்கும் பிரசார பொதுக்கூட்டத்திற்கு கால்கோள் நடும் நிகழ்ச்சி ஆண்டிப்பட்டியில் நடைபெற்றது.
ஆண்டிப்பட்டியில் 13 ஆம் தேதி  பிரதமர் மோடி பிரசாரம் - பொதுக்கூட்ட கால்கோள் நட்ட ஒ. பன்னீர்செல்வம்
x
ஆண்டிப்பட்டியில் வரும் 13 ஆம் தேதி பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.   அந்த நிகழ்ச்சிக்கான கால்கோள் நடும் விழாவில் தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  நிகழ்ச்சியில்  தேனி நாடாளுமன்ற தொகுதி மற்றும் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியின் வாக்குறுதிகளை துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் வெளியிட்டார்.  அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்ளும் பிரமாண்டமான பிரசார பொதுக்கூட்டத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த  5 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டார்


Next Story

மேலும் செய்திகள்