காவலர் வீட்டில் துணிகர கொள்ளை - 20 சவரன் நகை ரூ.1.50 லட்சம் பணம் திருட்டு

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவுக்குச் சென்று விட்டு நள்ளிரவில் வீடு திரும்பி உள்ளனர்
காவலர் வீட்டில் துணிகர கொள்ளை - 20 சவரன் நகை ரூ.1.50 லட்சம் பணம் திருட்டு
x
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவுக்குச் சென்று விட்டு  நள்ளிரவில் வீடு திரும்பி உள்ளனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து ,  உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த  20 சவரன் தங்க நகை, 1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அளிக்கப்பட்டு, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதுடன்,  கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்துள்ளனர். கொள்ளை நடந்த வீட்டைச் சுற்றிலும் காலியிடங்கள் இருந்ததால், கொள்ளையர்கள் திருட்டு சம்பவத்தை அரங்கேற்றி உள்ளதாக போலீசார் கூறினர்.


Next Story

மேலும் செய்திகள்