தேர்தலில் பணம் தண்ணீராய் பாயும் அவலம்! : தடுத்து நிறுத்த வழியே இல்லையா?

எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு தற்போது தேர்தல் பிரசாரத்தின் போதே, தமிழகத்தில் கட்டுக்கட்டாய் பணமும், குவியல் குவியலாக நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
x
தமிழகத்தில் வரும் 18 ஆம் தேதி  நாடாளுமன்ற தேர்தலும், 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்தி வரும்  சோதனைகளில் கட்டுக்கட்டாய் பணமும், குவியல் குவியலாக நகைகளும்  பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அனைத்து துறையிலும் நம்பர் 1 இடத்தில் தமிழகம் இருப்பதாக கூறப்படும் நிலையில், பணம் பறிமுதல் செய்யப்பட்டதிலும் நம்பர் 1 இடத்தில் தமிழகம் இருக்கிறது. பண முட்டைகளையும், தங்க நகைகளையும் சிறிய சிறிய கட்சிகள் எடுத்துச் செல்வதற்கு வாய்ப்புகள் இல்லை. அப்படி என்றால் இந்த விதிமீறல்களில் எந்தெந்த கட்சிகளுக்கு தொடர்பு இருக்கிறது?தேர்தலின் போது ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என பல்வேறு கட்சிகள் மீது விதி மீறல்கள் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்த வழக்கு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறதா, நடத்தப்படுகிறதா, வழக்குகளில் யாருக்காவது சிறை தண்டனை கிடைத்து இருக்கிறதா என்றால் எதுவுமே இல்லை. விதிமீறல்களில் ஈடுபடும் கட்சிகள் மீது, நடவடிக்கை எடுப்பதற்கு தற்போது உள்ள மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் இடமில்லை. இதனால் விதிமீறலில் ஈடுபட்டால், கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும், கட்சிகளுடைய சின்னத்தை முடக்குவதற்கான வகையிலும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில்  உடனடியாக திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று கூறுகின்றனர், சமூக ஆர்வலர்கள். 


Next Story

மேலும் செய்திகள்