பெட்ரோல் விலையில் மாற்றமில்லை - டீசல் விலை குறைந்தது : தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் தினசரி உயராத விலை

சென்னையில் கடந்த 25 நாட்களாக பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது.அதே நேரத்தில் டீசல் விலை குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பெட்ரோல் விலையில் மாற்றமில்லை - டீசல் விலை குறைந்தது : தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் தினசரி உயராத விலை
x
சர்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்ப, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரொல், டீசல்  விலையை  தினசரி நிர்ணயித்து வருகின்றன. இந்த நிலையில்,  நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னர், கடந்த 25 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் உள்ளது ஆச்சர்யத்தை அளித்துள்ளது. மார்ச் 11 ஆம் தேதி, சென்னையில்  75 ரூபாய் 25 காசுகளாக பெட்ரோல் விலை இருந்தது. அதே நாளில் டீசல் விலை 71 ரூபாய் 27 காசுகளாக இருந்தது. மார்ச் 3 ஆம் தேதி நிலவரப்படி, பெட்ரோல் விலை 75 ரூபாய் 62 காசுகளாக நிலவுகிறது. கிட்டத்தட்ட 25 நாட்களாக பெட்ரோல் விலையில் பெரிய மாற்றம் இல்லாமல் இருந்து வருகிறது. டீசல் விலை 50 காசுகள் வரை குறைந்து லிட்டருக்கு 69 ரூபாய் 78 காசுகளாக உள்ளது. இதற்கு முன்னர் தெலுங்கானா, மிசோரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களின்போது எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தாமல் இருந்துள்ளன. தேர்தல் முடிந்ததும் ஒரே நாளில் விலை ஏற்றத்தை அறிவித்தன. பெட்ரோல், டீசல் விலை உயர்வு தேர்தல் வெற்றியை பாதிக்கும் என்பதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்தது என அப்போது எதிர்கட்சிகள் விமர்சனம் செய்தன. அதேபோன்ற உத்தி இப்போதும் கடைபிடிக்கப்படுகிறதா என சந்தேகம்  எழுவதை தவிர்க்க முடியாது என்றாலும், தற்போதைய நிலவரப்படி பெட்ரோல், டீசல் விலை மாற்றமில்லாமல் இருப்பது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்லலாம்.

Next Story

மேலும் செய்திகள்