"கபடி பயிற்சியாளரின் மகன் ஆபாச பேச்சு... பாலியல் தொல்லை.." - பாதுகாப்புக்கோரி காவல் ஆணையரிடம் மாணவி மனு

கோவையில் பாலியல் சீண்டல் தருவதாக, கபடி பயிற்சியாளரின் மகன் மற்றும் குடும்பத்தினர் மீது மாணவி ஒருவர் புகாரளித்திருப்பது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கபடி பயிற்சியாளரின் மகன் ஆபாச பேச்சு... பாலியல் தொல்லை.. - பாதுகாப்புக்கோரி காவல் ஆணையரிடம் மாணவி மனு
x
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் 19 வயது மாணவி ஒருவர், சுந்தராபுரத்தை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரிடம் கபடி பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில், விஸ்வநாதனின் மகன் சஞ்சீவ்குமார், மாணவியின் அழகு மற்றும் கன்னித் தன்மை குறித்து ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. வீட்டுக்கு தனியாக வருமாறு வற்புறுத்தியதோடு, கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இது குறித்து கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் மாணவி புகாரளித்த நிலையில், சஞ்ஜீவ்குமார், கைது செய்யப்பட்டார். இதற்கிடையே, மகன் மீது அளித்த புகாரை திரும்ப பெறுமாறு மாணவியின் வீட்டுக்குச் சென்று சஞ்சிவ் குமாரின் தாய் மற்றும் உறவினர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து, மாநகர காவல் ஆணையரிடம் மாணவி மீண்டும் புகார் அளித்துள்ளார். பொள்ளாச்சி விவகாரத்தில் தன் பெயரையும் சேர்த்து விடுவதாக சஞ்ஜீவ் மிரட்டியதாகவும் கூறியுள்ள அந்த மாணவி,  தமது குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்குமாறு கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்