கோயில் வளாகத்தில் பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி : வழிபாடு நடத்தும் இடத்தில் நடந்த மதுவிருந்து

இருநூறு ரவுடிகள் புடைசூழ கோயில் வளாகத்தில், கத்தியால் ரவுடி ஒருவன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயில் வளாகத்தில் பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி : வழிபாடு நடத்தும் இடத்தில் நடந்த மதுவிருந்து
x
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே மலையடிவாரத்தில் அல்லேரி முனியப்பன் கோயில் உள்ளது. வேண்டுதல் நிறைவேற ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டு நேர்த்தி கடன் செலுத்த பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வருவது வழக்கம். நேர்த்தி கடன் செலுத்தும் அந்த இடத்தில் இருநூறு ரவுடிகள் புடைசூழ கத்தியால் கேக் வெட்டி தனது பிறந்தநாளை பட்டப்பகலில் வெட்ட வெளியில் கொண்டாடியுள்ளான், பல்வேறு குற்றவழக்குகளில் தேடப்பட்டு வரும் ஜீசு என்ற ரவுடி. கேக் வெட்டியதோடு மட்டும் இல்லாமல் தனது கூட்டாளிகளுக்கு கோயில் வளாகத்தில் மது விருந்தும் அளித்துள்ளான் அந்த ரவுடி. பின்னர் எதுவும் நடக்காதது போல அங்கிருந்து அனைத்து ரவுடிகளும் பிரிந்து சென்றுள்ளனர். தேர்தலை முன்னிட்டு சேலத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ரவுடிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இருநூறு ரவுடிகள் ஓர் இடத்தில் குழுமி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொண்டாட்டம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய நிலையில் ரவுடிகள் ஜீசு , மோசஸ், சிலம்பரசன், திருநாவுக்கரசு மற்றும் ரமேசை கைது செய்துள்ள போலீசார் மற்ற ரவுடிகளை தேடி வருகிறார்கள். 

Next Story

மேலும் செய்திகள்