வீட்டுக்கு செல்லும் போது வெறுங்கையுடன் செல்லும் விவசாயிகள் : மதுரை உயர் நீதிமன்றம் நீதிபதிகள் வேதனை

விவசாயிகள் இரவு பகல் பாராது கண்விழித்து உழைத்தாலும், வீட்டுக்கு செல்லும் போது வெறுங்கையுடன் தான் செல்வதாக மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
வீட்டுக்கு செல்லும் போது வெறுங்கையுடன் செல்லும் விவசாயிகள் : மதுரை உயர் நீதிமன்றம் நீதிபதிகள் வேதனை
x
தூத்துக்குடியை சேர்ந்த ராம்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், விவசாய தொழிலில் ஏற்பட்ட இழப்பு காரணமாக 1995-ம் ஆண்டு முதல் சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளாளர். எனவே நாடு முழுவதும் ஒரே விலையை ஆதார விலையாக நிர்ணயம் செய்வது தவறு என்றும், தமிழக அளவில் விவசாய வல்லுநர்கள் குழுவை அமைத்து, சாகுபடி செலவு அடிப்படையில் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன் ,எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது விவசாயிகள் இரவு பகல் பாராது கண்விழித்து உழைத்தாலும், வீட்டுக்கு செல்லும் போது வெறுங்கையுடன் தான் செல்வதாக தெரிவித்த நீதிபதிகள், பிற பொருட்களுக்கு உற்பத்தியாளர்களே விலை நிர்ணயம் செய்யும் பொழுது விவசாயிகளுக்கு மட்டும் அந்த உரிமை இல்லை" என வருத்தம் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்