அரசு பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கும் நிகழ்வு : சீதனத்தை ஊர்வலமாக எடுத்து வந்த பெற்றோர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சிக்கு சொந்தமான சிவானந்தபுரம் அரசு பள்ளிக்கு கல்விச்சீர் வழக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அரசு பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கும் நிகழ்வு : சீதனத்தை ஊர்வலமாக எடுத்து வந்த பெற்றோர்கள்
x
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சிக்கு சொந்தமான சிவானந்தபுரம் அரசு பள்ளிக்கு கல்விச்சீர் வழக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளிக்கு தேவையான மேசைகள், மாணவர்களுக்கு தேவையான நோட்டு, புத்தகங்கள், பாய், பென்சில், சேர், குடம் உள்ளிட்ட பொருட்களை தாரை தப்பட்டை முழங்க பெற்றோர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். கல்விச் சீர் வழங்கிய பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பள்ளி ஆசிரியர்கள்மற்றும் மாணவ-மாணவியர் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.  

Next Story

மேலும் செய்திகள்