விவசாயிகளை பார்த்து தப்பியோடிய மர்மநபர்கள் : 2 துப்பாக்கிகள், மான் இறைச்சி மூட்டை பறிமுதல்

பழனி அருகே நள்ளிரவில் மான் வேட்டையில் ஈடுபட்ட மர்மநபர்கள், விவசாயிகளை பார்த்தவுடன் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகளை பார்த்து தப்பியோடிய மர்மநபர்கள் : 2 துப்பாக்கிகள், மான் இறைச்சி மூட்டை பறிமுதல்
x
பழனி அருகே நள்ளிரவில் மான் வேட்டையில் ஈடுபட்ட மர்மநபர்கள், விவசாயிகளை பார்த்தவுடன் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஆர். வாடிப்பட்டி விவசாயிகள் சிலர் வயலுக்கு சென்றுள்ளனர். அவர்களை பார்த்த மர்மநபர்கள், கையில் வைத்திருந்த பொருட்களை விட்டுவிட்டு தப்பியோடினர். திருடர்களாக இருக்குமோ என சோதனையிட்ட நிலையில், 2  துப்பாக்கிகள், சாக்கு மூட்டையில் இறைச்சி ஆகிவற்றை விட்டுச் சென்றது தெரியவந்தது. தகவலின் பேரில் வந்த போலீசார், பொருட்களை பறிமுதல் செய்து நடத்திய விசாரணையில், இறைச்சி மான் கறி என்பதும், அவர்கள் மான் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடி வந்ததும் தெரியவந்தது. தப்பி ஓடிய நான்கு பேர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்