மூக்கையா தேவர் பிறந்த நாள் : ரவீந்திரநாத் குமாருக்கு வேல் கொடுத்து வரவேற்பு

மூக்கையா தேவரின் 97 வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மூக்கையா தேவர் பிறந்த நாள் : ரவீந்திரநாத் குமாருக்கு வேல் கொடுத்து வரவேற்பு
x
மூக்கையா தேவரின் 97 வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உசிலம்பட்டி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் இந்த விழாவிற்கு தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், வருவாய் துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார், தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் ஆகியோர் வருகை தந்தனர். வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு அங்கிருந்த பொதுமக்கள் மஞ்சள் தலப்பாகை கட்டி கையில் வேல் கொடுத்து வரவேற்றனர். 


Next Story

மேலும் செய்திகள்