தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை : தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்திரா, அசோக் லவாசா பங்கேற்பு

நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல்கள் குறித்து, தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் இந்திய தேர்தல் ஆணையர்கள் நடத்திய ஆலோசனை நிறைவடைந்தது.
தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை : தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்திரா, அசோக் லவாசா பங்கேற்பு
x
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இந்திய தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்திரா மற்றும் அசோக் லவாசா ஆகியோர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில், தேர்தல் ஆணைய இயக்குநர்கள் திலீப் சர்மா, திரேந்திர ஒஜா மற்றும் தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான அதிமுக, திமுக, தேமுதிக, பாஜக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மாறிமாறி புகார்கள் கூறிய நிலையில், 3 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டம் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ள ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்