100 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி : கைரேகை சட்டத்தை எதிர்த்து உயிர்நீத்த தியாகிகளுக்கு மரியாதை - துணை முதலமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்பு

கைரேகை சட்டத்தை எதிர்த்து உயிர்நீத்த தியாகிகளுக்கு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள பெருங்காமநல்லூர் கிராமத்தில் 100 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
100 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி : கைரேகை சட்டத்தை எதிர்த்து உயிர்நீத்த தியாகிகளுக்கு மரியாதை - துணை முதலமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்பு
x
கைரேகை சட்டத்தை எதிர்த்து உயிர்நீத்த தியாகிகளுக்கு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள பெருங்காமநல்லூர் கிராமத்தில் 100 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக உசிலம்பட்டியில் உள்ள தேவர் சிலைக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மாலை அணிவித்தார். அதனை தொடர்ந்து ஊர்வலமாக சென்று, தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர். வீர தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நினைவு தூணில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்