தினத்தந்தி நாளிதழ் நடத்திய வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி: பலனுள்ளதாக இருந்ததாக மாணவ - மாணவிகள் மகிழ்ச்சி

தினத்தந்தி நாளிதழ் மற்றும் கலைஞர் கருணாநிதி தொழில் நுட்ப கல்லூரி இணைந்து வெற்றி நிச்சயம் என்ற வழிகாட்டும் நிகழ்ச்சியை ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடத்தின.
x
தினத்தந்தி நாளிதழ் மற்றும் கலைஞர் கருணாநிதி தொழில் நுட்ப கல்லூரி இணைந்து வெற்றி நிச்சயம் என்ற வழிகாட்டும் நிகழ்ச்சியை ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடத்தின. புதுடெல்லி பல்கலை கழக மானிய குழு துணைத் தலைவர் எச். தேவராஜ் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். எஸ்.எஸ்.எல்.சி, ப்ளஸ் -1 மற்றும் ப்ளஸ்-2 முடித்த மாணவ மாணவிகளின்  மேற்படிப்பு, வேலை வாய்ப்பு, எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து பல்வேறு துறைகளை சார்ந்த வல்லுனர்களும், பேராசிரியர்களும் ஆலோசனை வழங்கினார்கள். தினத்தந்தியின் வெற்றி நிச்சயம் வழிகாட்டி நிகழ்ச்சி தங்களுக்கு  பெரும் பயனுள்ளதாக இருந்தது என்று மாணவிகள் தெரிவித்தனர் 

Next Story

மேலும் செய்திகள்