வருமான வரித்துறை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை - சத்யபிரதா சாஹூ

வேலூர் தொகுதியில் தேர்தலை நிறுத்துவது குறித்து வருமான வரித்துறை அளிக்கும் அறிக்கையின்படி தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
x
வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் கோடிக் கணக்கான ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வருமான வரிச் சோதனை மற்றும் தேர்தல் ஆணைய நடவடிக்கை குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது இதனை கூறினார். ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாகவும் அவர் கூறினார். வருமான வரித்துறையின் அறிக்கை கிடைத்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்படும் என்றும்  சாஹூ கூறினார். பணம் பறிமுதலில் கட்சி மற்றும் வேட்பாளர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது கவனிக்கப்படும் என்ற அவர் மேல் நடவடிக்கை குறித்து தேர்தல் ஆணையம்  முடிவு செய்யும் என்று சத்யபிரதா சாஹு தெரிவித்தார். இதுவரை தேர்தல் நடத்தை விதி மீறலில் 800 புகார்கள் மூலம் 80 எப்.ஐ.ஆர். பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர் இதுவரை 78 கோடி ரூபாய் பணம், தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்