மக்கள் நீதி மய்ய தேர்தல் அறிக்கை வெளியீடு - கமல்

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் புதுச்சேரிக்கான தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்
மக்கள் நீதி மய்ய தேர்தல் அறிக்கை வெளியீடு - கமல்
x
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் புதுச்சேரிக்கான  தேர்தல் அறிக்கையை, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, செயற்கைகோள் நகரமாக மாற்றுதல், பொருளாதார மண்டலங்களை உருவாக்குதல் போன்ற வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.இந்த நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் புதுச்சேரி வேட்பாளர் சுப்ரமணியத்தை ஆதரித்து  பேசிய கமல் புதுச்சேரி அரசியலில் இருக்கும் மூன்று சாமிகள், அழிக்கும் சாமிகளாக இருப்பது வேதனையளிப்பதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்