அலகு குத்தி, தீச்சட்டி எடுத்து பக்தர்கள் வழிபாடு - பக்தி பரவசத்தில் பக்தர்கள் நடனம்

மகா மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பெண்கள் தீச்சட்டி ஏந்திவந்து சாமி தரிசனம் செய்தனர்.
அலகு குத்தி, தீச்சட்டி எடுத்து பக்தர்கள் வழிபாடு - பக்தி பரவசத்தில் பக்தர்கள் நடனம்
x
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள மகா மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பெண்கள் தீச்சட்டி ஏந்திவந்து சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கடந்த 17ஆம் தேதி கொடி கம்பம் நடப்பட்டு, காப்பு கட்டப்பட்டது.காவிரி ஆற்றில் நீராடி, தீர்த்தக்குடம் எடுத்துவந்தனர். பெண்கள் தீச்சட்டி ஏந்தி பக்தி பரவசத்துடன் ஆடிவர, ஆண்கள் பலர் கன்னம் மற்றும் உடலில் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, வழிபாடு செய்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

Next Story

மேலும் செய்திகள்