ரூ.8.10 லட்சம் மதிப்பிலான சேலைகள் பறிமுதல் - சோதனையில் தொடர்ந்து சிக்கும் பணம் மற்றும் பொருட்கள்

8 லட்சத்து 10 ஆரயிம் ரூபாய் மதிப்பிலான 1620 காட்டன் மற்றும் பாலியஸ்டர் சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ரூ.8.10 லட்சம் மதிப்பிலான சேலைகள் பறிமுதல் - சோதனையில் தொடர்ந்து சிக்கும் பணம் மற்றும் பொருட்கள்
x
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பாப்பம்பாடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில், 8 லட்சத்து 10 ஆரயிம் ரூபாய் மதிப்பிலான 1620 காட்டன் மற்றும் பாலியஸ்டர் சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான இந்த சேலைகள், உரிய ஆவணம் இல்லாததால் சங்ககிரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.இதேபோல காளிகவுண்டம்பாளையத்தை சேர்ந்த கோவில் பூசாரி கோவிந்தராஜ் என்பவர் உரிய ஆவணம் இன்றி காரில் கொண்டு சென்ற 77 ஆயிரத்து 460 ரூபாயும், எட்டிக்குட்டைமேடு பகுதி கோழி வியாபாரி பூபதி என்பவர் உரிய ஆவணம் இன்றி எடுத்துச்சென்ற 92 ஆயிரத்து 629 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது.

தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.10 கோடி 


பல்லடத்தில் தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட வங்கி பணம் 10 கோடி ரூபாய் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து வங்கி அதிகாரிகளிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கரடிவாவி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது அந்த வாகனத்தில் வங்கி ஊழியர்கள் பணம் கொண்டு சென்றது தெரியவந்தது.ஆனால் பணம் கொண்டு செல்லும் ஊர் பெயரில் மாற்றம் இருந்தையடுத்து, அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் வங்கி அதிகாரிகள் உரிய ஆவணத்தை சமர்ப்பித்ததையடுத்து பணம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்