மணிமுத்தாறு அணையில் விரைவில் படகு போக்குவரத்து - பரிசல்களை இயக்கவும் வனத்துறை முடிவு

இயற்கையை கண்டு ரசிக்க பார்வையாளர் கோபுரங்கள் சுற்றுலா பயணிகளை ஈர்க்க வனத்துறை அதிரடி
மணிமுத்தாறு அணையில் விரைவில் படகு போக்குவரத்து - பரிசல்களை இயக்கவும் வனத்துறை முடிவு
x
தமிழ்நாடு வனத்துறைக்கு சொந்தமான பகுதிகளில் அமைந்துள்ள சுற்றுலா தளங்களை மேம்படுத்தும் திட்டங்களில் ஒன்றாக உருவாக்கப்பட்ட கயல் திட்டத்தின் கீழ் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ள பகுதிகளில் வனதுறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக மணிமுத்தாறு அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க,சூரிய ஒளியால் இயங்கக்கூடிய படகு போக்குவரத்து அறிமுகம் செய்யப்பட உள்ளது.இன்னும் ஒரு சில தினங்களில் இந்த படகு போக்குவரத்து தொடங்க உள்ள நிலையில், மராட்டிய மாநிலத்தில் இருந்து படகுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுதவிர பரிசல்களும் இயக்கப்பட உள்ளது.அணைக்கு மேல் பகுதியில் அமைந்துள்ள அருவி மற்றும்  வனபகுதியை  காணும் வகையில் பார்வையாளர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.வனத்துறையின் இந்த புதிய முயற்சிகள் மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்